Peranbu | பேரன்பு | August 18, 2023 | Tamil Serial Reviews | கல்யாணத்தை நிற்பாட்ட வீட்டினுள்ளே தளிர்த்த விஷச்செடி

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஒரு நல்ல காரியங்கள் நடைபெற முன்பு சில கெட்டவைகளும் நடக்கும். அவை தானாக நடப்பவையும் உண்டு. மற்றவர்களால் உருவாக்கப்படுவதுமுண்டு.

தாய்க்கு அடுத்ததாகக் குடும்பத்தைத் தாங்க வேண்டியவள்தான் அண்ணி என்பவ. அவவே சூத்திரகாறியாக மாறினால் எப்படி அந்தக் குடும்பம் தாங்கும்.

முகூர்த்தப் புடவை தானாக எரிந்ததா? அல்லது எரிக்கப் பட்டதா? இருளாக உள்ள காலம் ஒருநாளைக்கு விடியத்தானே வேண்டும்.

சுற்றிவர என்ன நடக்குதென்று பார்க்காமல் இருந்தால் நாங்கள் பாதாளத்தில் விழுந்த பின்புதான் யோசிப்போம்.

வாக்குக் கொடுத்தால் தவறுவது தவறுதானே! அப்படியென்றால் தெய்வங்களுக்குக் குடுக்ககப்பட்ட வாக்கு அல்லது பொருந்தனை காப்பாற்றாமல் விடுவது அல்லது எமது வேலை முடிந்ததும் மறந்தே போவது சரியில்லைதானே! உடனே நிறைவேற்றிவிடனும்.

இந்த சீரியலின் பகுதி முகூர்த்தப் புடவை எரிந்தது - அதற்குரிய பரிகாரங்களை ஒட்டுக் கேட்பது.

இதில் எது மிகவும் ஆபத்தானது? என்னைப் பொறுத்தவரையில் ஒட்டுக் கேட்பதுதான். காரணம், ஒட்டுக் கேட்டு இந்தக் கலயாணத்தை நிறுத்த நினைக்கும் மனம் இருக்கு பாருங்கள் அதைத்தான் நான் நினைக்கின்றேன். நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

அப்படியென்றால் முகூர்த்தப் புடவை தவறுதலாக எரியவில்லை என்றும் நினைக்கலாமல்லவா?

அமுதா ஒருபக்கம் இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாதென்று பிளானுக்கு மேல பிளான்கள் போட்டுக் கொண்டிருக்கையிலே - பசுபதி கல்யாணத்துக்கு முன்பே ஷென்மதியைக் கொல்லும்படி அடியாட்களை அனுப்பியது என்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.

இப்படியான வித்தைகளெல்லாம் எமது நாட்டிலே நடக்காமல் இருக்கிறதா என்ன?

இவற்றையெல்லாம் அனுபவிக்காதவர்கள் எம்மில் இருக்கமுடியாது. அப்போ எங்களுக்கு அதன் கனாகனம் தெரியாது. ஏனென்றால் அது எமது வாழ்க்கையுடனே கலந்து போய் சின்ன சின்ன டோசாக (ஸ்லோ போயிசன் மாதிரி) எமது வாழ்க்கையிலே கலந்து கொண்டேயிருக்கும்.

அத்துடன் அவர்களும் நம்பக்கமே இருந்து கொண்டு எமது வீழ்ச்சியின் படிகளை அவதானித்துக் கொண்டிருப்பார்கள்.

இதுதான் இங்கு ஷென்மதியின் குடும்பத்திற்கும், றாஜேஸ்வரியினுடைய குடும்பத்திற்கும் நடக்கப் போகின்றது.

நாளைக்கு கார்த்திக் தனது வாழ்க்கையின் உண்மைகளை தானே ஷென்மதியிடம் கோவிலிலே வைத்து சொல்ல இருக்கிறார்.

இந்த விஷயத்தினை ஷென்மதிக்கு சொல்ல வேண்டும், அதுவும் கல்யாணத்திற்கு முன்பு சொல்ல வேண்டும் என்று றாஜேஸ்வரி யோசித்ததற்குக் காரணம் முகூர்த்தப் புடவை எரிந்ததுதான்.

றாஜேஸ்வரி கொடுத்த அறிவுரையின்படி ஏற்றுக் கொண்ட கார்த்திக் உண்மைகளைச் சொன்னால் என்ன நடக்கும்?

ஷென்மதி இந்த விஷயத்தை எவ்வாறு எற்றுக் கொள்ளுவா? நல்லவிதமாக ஏற்றுக் கொள்ளுவாவா? அல்லது விபரீதமாக நினைப்பாவா? அவ்வாறு நினைப்பதிலும் தவறொன்றும் இல்லையே!

ஆனால், ஷென்மதி அன்பு வைத்து விட்டாவே கார்த்திக்மேல. அவவுடைய அன்பு உண்மையானதுதானே - அப்படியான உண்மை அன்பு இப்படியாக கூறப்படும் உண்மைகள், ஆனால், கசப்பானவையாக இருந்தாலும், மன்னிக்கும் தன்மை வாய்ந்தது.

ஷென்மதி கார்த்திக் சொல்லிய போது ஷென்மதியால ஏற்றுக் கொள்ள முடியாமல் போனாலும், கோவிலை விட்டு வெளியே வரும் முன்பே ஷென்மதி கார்த்திக்குடைய உண்மையான குணங்களை ஏற்றுக் கொண்டு கார்த்திக்கையும் ஏற்றுக்கொண்டுதான் வீடு வருவாள்.

ஷென்மதிக்கும் கார்த்திக்குடைய எல்லா உண்மைகளும் தெரியவந்த பிறகு ஷென்மதியுடைய கல்யாணத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பு இல்லை என்றில்லை.

அந்தப் பிரச்சினைகள் எந்தக் கோணத்திலிருந்து வரப்போகிறது - பொறுத்திருந்து பார்ப்போம் - நீங்களும் பொறுத்தானே அகவேண்டும்.

பார்ப்போம் அடுத்த இந்த எப்பிசோட்டை.

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More